இந்தியாவில் 4.13 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு... மேற்கு வங்கம் மாநிலத்தில் தான் அதிகபட்சம்!!

டெல்லி : நாட்டிலேயே மேற்கு வங்கம் மாநிலத்தில் தான் பிச்சைக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு தொடர்பான கேள்விக்கு ஒன்றுக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர் நாராயணசாமி, நாட்டிலேயே மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 81,244 பிச்சைக்காரர்கள் உள்ளதாக குறிப்பிட்டார். இதில் 10 வயதிற்கும் உட்பட்ட பிச்சைக்காரர்கள் மட்டும் 4,323 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 65,835 பிச்சைக்காரர்கள் உள்ளனர் என்றும் 14,599 பேர் 19 வயதுக்கு உட்பட்டோர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 30,219 பேரும் பீகாரில் 29,723 பிச்சைக்காரர்களும் உள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 6,814 பிச்சைக்காரர்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 782 பேர் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் 4,13, 670 பிச்சைக்காரர்கள் உள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.

Related Stories: