முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு ரூ.1 லட்சம் பஞ்சப்படியுடன் ஓய்வூதியம்: வேலைநிறுத்தம் செய்யப் பேராசிரியர்கள் மற்றும் பல்கலை. தொழிலாளர் சங்கத்தினர் முடிவு

சேலம்: முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு பஞ்சப்படியுடன் ஓய்வூதியம் வழங்க பெரியார் பல்கலை. துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தங்கவேலுக்கு ரூ.1 லட்சம் பஞ்சப்படியுடன் சேர்ந்து ஓய்வூதியம் வழங்க துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது.

இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது. அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலைப் பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதனையடுத்து பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்படாமல் பணி ஒய்வு பெற்றார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு ரூ.1 லட்சம் பஞ்சப்படியுடன் சேர்த்து ஓய்வூதியம் வழங்கப் பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஊழல் முறைகேட்டில் சிக்கிய தங்கவேலுக்கு ரூ.1 லட்சம் பஞ்சப்படியுடன் சேர்த்து ஓய்வூதியம் வழங்கப் பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவிட்டுள்ள சம்பவம் பல்கலைக்கழக ஊழியர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்கவேலு மீதான ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அனைத்து ஓய்வூதிய பலன்களும் வழங்க ஆணையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தம் செய்யப் பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

The post முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு ரூ.1 லட்சம் பஞ்சப்படியுடன் ஓய்வூதியம்: வேலைநிறுத்தம் செய்யப் பேராசிரியர்கள் மற்றும் பல்கலை. தொழிலாளர் சங்கத்தினர் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: