போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும்: முதலமைச்சர் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை: போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் வலிவுறுத்தியுள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. தமிழ்நாட்டில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக குற்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் கூடி வருகிறது.

இதனால் தமிழ்நாட்டில் போதை ஒழிப்பு நடவடிக்கையை அரசு தீவிர்படுத்தி உள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் ஆலோசனை நடைபெற்றது. சில தினங்களுக்கு முன் தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டது. போதைப்பொருள் நடமாட்டம், மாவட்ட வாரியான நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் வலிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பாகவும் மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும்: முதலமைச்சர் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்! appeared first on Dinakaran.

Related Stories: