உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கபில்சிபல்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவராக தேர்வான காங். மூத்த தலைவர் கபில்சிபலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெற்றி பெற்றுள்ளார். கபில் சிபல் 1066 வாக்குகள் பெற்று அவரைஎதிர்த்து போட்டியிட்ட மற்றொரு சீனியர் வழக்கறிஞரான பிரதீப் ராயை தோற்கடித்தார். பிரதீப் குமாருக்கு வெறும் 689 வாக்குகளே கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோக்சபா தேர்தல் நேரத்தில் கபில் சிபல் வெற்றி பெற்று இருப்பதை காங்கிரஸ் கட்சி கொண்டாடி வருகிறது.

கபில் சிபல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவது இது 4-வது முறையாகும். கடந்த மே 8 ஆம் தேதி, வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிட போவதாக கபில் சிபல் அறிவித்து இருந்தார். அவரை எதிர்த்து தற்போது பார் அசோசியேஷன் தலைவராக இருக்கும் ஆதிஷ் அகர்வலா, பிரியா ஹிங்கோரனி உள்ளிட்டோரும் போட்டியிட்டனர். கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவராக உள்ளார்.

ஹார்வார்டு சட்ட பள்ளியில் பட்டம் பெற்ற கபில் சிபல் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக 1989-90 களில் பதவி வகித்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது கடந்த 2001 ஆம் ஆண்டு இதற்கு முன்பாக வழக்கறிஞர் சங்க தலைவர் பொறுப்பை வகித்தார். இந்த நிலையில், மீண்டும் தேர்தலில் போட்டியிட்ட கபில் சிபல் வெற்றி பெற்றுள்ளார்.

* முதல்வர் மு.க.ஸ்டாலி வாழ்த்து

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கபில்சிபல்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் அவரது வெற்றி மதுக்கடையின் சுதந்திரமும் நமது அரசியலமைப்பு விழுமியங்களும் பாதுகாப்பான கைகளில் இருப்பதை உறுதி செய்கிறது. இந்திய மக்கள் ஆழமாகப் போற்றும் நீதி மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்த அவரது தலைமையின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

The post உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கபில்சிபல்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: