16 வயதினிலே அசத்தும் இளம் புயல் லிண்டா!

சார்ல்ஸ்டன்: அமெரிக்காவில் நடைபெறும் கிரெடிட் ஒன்  சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் விளையாட, 16 வயது செக் குடியரசு வீராங்கனை லிண்டா ஃபுருவர்தோவா தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் குரோஷியாவின் அனா கோஞ்சுஹ் (24 வயது, 62வது ரேங்க்) உடன் மோதிய லிண்டா (188வது ரேங்க்) 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடிய லிண்டா 6-1, 6-3 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 49 நிமிடங்களுக்கு நீடித்தது.

டென்னிஸ் உலகில் ஏற்கனவே செக் குடியரசு நாட்டில் இருந்து  பார்போரா கிரெஜ்சிகோவா, கரோலினா பிளிஸ்கோவா, பெத்ரா குவிதோவா, கரோலினா முச்சோவா, மார்டின்கோவா, மார்கெடா வோண்ட்ருசோவா  என முன்னணி வீராங்கனைகள் கலக்கி வரும் நிலையில், அந்தப் பட்டியலில் லிண்டா புதிய இளம் புயலாக இணைந்துள்ளார். மற்றொரு முதல் சுற்றில் போலந்தின் மக்டலெனா ஃபிரெக்குக்கு (24வயது, 87வது ரேங்க்)  எதிராகக் களமிறங்கிய செக். நட்சத்திரம் குவித்தோவா (32வயது, 29வது ரேங்க்) 6-7 (6-8), 2-3 என பின்தங்கிய நிலையில் காயம் காரணமாக விலகினார். முன்னணி வீராங்கனைகள் ஹீதர் வாட்சன் (இங்கிலாந்து),  ஷூவாய் சாங் (சீனா),  ஜாஸ்மின் பவுலினி (இத்தாலி), ஆலிஸ் கார்னெட் (பிரான்ஸ்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories: