குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் தெருவில் பேவர் பிளாக் சேதம்-சீரமைக்க கோரிக்கை

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே, ரெங்கப்பநாயக்கர்பட்டியில், குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கு தோண்டுவதால், தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் சேதமடைகின்றன. இவைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்திராயிருப்பு அருகே, ரெங்கப்பநாயக்கர்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள ரேஷன் கடையிலிருந்து ஊருக்கு செல்லும் செல்லும் சாலையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக, பேவர் பிளாக் கற்களை தோண்டியுள்ளனர். குடிநீர் குழாய் பதித்து முடித்தவுடன், பேவர் கற்களை சரியாக பதித்து சாலையை சீரமைக்காமல் உள்ளனர்.

இவ்வாறு 5 இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் சாலையில் பேவர் பிளாக் கற்கள் சேதமடைந்துள்ளன. இதனால், இரவு நேரங்களில் டூவீலர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், நடந்து செல்பவர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. குடிநீர் குழாய் பதித்து பல மாதங்கள் ஆகியும், சாலையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஊராட்சி நிர்வாகம் சாலையில் பேவர் பிளாக் கற்களை பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: