உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை: மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடந்தது. தொற்று குறைந்த நிலையில், இந்தாண்டு மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை (ஏப். 5) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப். 12ல் மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், ஏப். 14ல் திருக்கல்யாணம், ஏப். 15ல் தேரோட்டம் நடக்கிறது.

 திருக்கல்யாணம் நடக்கும் வடக்காடி வீதி, மேற்கு ஆடி வீதிகளில் செயற்கை பூக்களாலான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. பந்தல் பகுதியில் 300 டன் ஏசி மற்றும்  திருக்கல்யாண மணமேடையில் 100 டன் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. திருமண மண்டபம் பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட உள்ளது. திருமணத்தை 20 ஆயிரம் பேர் நேரடியாக காண, சித்திரை வீதியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

Related Stories: