மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 8வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா முதல்போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்திய நிலையில், 2வது போட்டியில் பெங்களூருவிடம் போராடி தோற்றது. அந்த அணியின் பவுலிங் வலுவாக உள்ள நிலையில் பேட்டிங்கில் வெங்கடேஷ், ரானா பார்மில் இல்லை.மறுபுறம் பஞ்சாப் ,பெங்களூருக்கு எதிரான முதல் போட்டியில் 205 ரன்னை சேசிங் செய்து வென்ற உற்சாகத்தில் உள்ளது.