வேப்பனஹள்ளியில் பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளிக்கு நடந்து சென்ற மாணவிகள்

வேப்பனஹள்ளி :  நாடு முழுவதும் வங்கிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில் நேற்று வேப்பனஹள்ளி பகுதியில் பஸ்கள் இயக்கப்படவில்லை. வேப்பனஹள்ளியில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று பொது வேலை நிறுத்தம் காரணமாக பஸ்கள் இயக்கப்படாததால் ஏராளமான மாணவர்கள் தங்களது கிராமங்களிலிருந்து நடந்தே பள்ளிக்கு சென்றனர்.

அதேபோல், மாலை பள்ளி முடிந்தபின் பல கிலோ மீட்டர் தொலைவுள்ள தங்களது வீடுகளுக்கு நடந்தே சென்றடைந்தனர். மாணவிகள் தொடர்ந்து நடக்க முடியாததால் ஆங்காங்கே சாலையோரம் அமர்ந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் நடந்து சென்றனர். மாணவர்கள் சிலர் டூவீலரில் 4 பேர் வரை பயணித்து வீடு திரும்பினர். வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கி பணிகள் மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Related Stories: