தரக்குறைவாக பேசியது கண்டிக்கத்தக்கது தெலுங்கு தேசம் மண்டல தலைவர், துணை முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்-ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை

சித்தூர் : ‘‘தெலுங்கு தேச கட்சி மண்டல தலைவர் சிட்டிபாபு, துணை முதலமைச்சர் நாராயணசாமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்று ஜில்லா பரிஷத் தலைவர் எச்சரித்துள்ளார்.சித்தூரில் நேற்று  கங்காதர நெல்லூர் ஜில்லா பரிஷத் தலைவர் லக்ஷ்மி, பத்திரிகையாளர் மன்றத்தில் பேசியதாவது:

ஆந்திர மாநில துணை முதலமைச்சர் நாராயணசாமியை தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மண்டல தலைவர் சிட்டி பாபு தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. துணை முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று வருடங்களில் மேலூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்துள்ளார். 150 கோடி ரூபாய் மதிப்பில் கோயில்கள் கட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் செய்துள்ளார்.

ஆனால் தெலுங்கு தேச கட்சி மண்டல தலைவர் சிட்டிபாபு, துணை முதலமைச்சர் நாராயணசாமி, நெல்லூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரு நலத்திட்ட பணிகள் கூட செய்யவில்லை. அவருடைய ஆட்சியில் நில அபகரிப்பு கள்ளச்சாராயம் விற்பனை, மணல் கொள்ளை உள்ளிட்ட பணிகள் செய்து வருகிறார் என தெரிவித்து துணை முதலமைச்சரை தரக்குறைவாக பேசியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மண்டல தலைவர் சிட்டிபாபு ஜில்லா பரிஷத் தலைவராக இருந்தபோது 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை விவசாய பூமிகளாக மாற்றி அவருடைய பெயருக்கு பட்டா செய்து கொண்டார்.

 அதுமட்டுமல்லாமல் கழிவு நீர் கால்வாய்கள், சிமெண்ட் சாலைகள் உள்ளிட்டவை சீரமைப்பதாக தெரிவித்து அரசை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் ஊழல் செய்துள்ளார். ஊழல் செய்யாத துணை முதலமைச்சர் நாராயணசாமியை ஊழல் செய்ததாக மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக தரக்குறைவாக பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆகவே உடனடியாக தெலுங்கு தேச கட்சி மண்டல தலைவர் சிட்டிபாபு, நெல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான துணை முதலமைச்சர் நாராயணசாமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். இதில் கங்காதர நெல்லூர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி மண்டல தலைவர் ஹரிபாபு, எம்.பி. பி அனிதா லோகேஷ் ரெட்டி, விவசாய சங்க தலைவர் வெங்கடராம ரெட்டி, எம்.பி. பி.முனிராஜ் ரெட்டி உள்பட ஏராளமான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: