ஷாங்காயில் மீண்டும் ஊரடங்கு

பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினசரி புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்ைக அதிகரித்துக்கொண்டே வருகின்றது.   நாடு தழுவிய அளவில் இந்த மாதம் மட்டும் 56,000 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து இங்கு பல்வேறு நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவின் மிகப்பெரிய  பொருளாதார நகரமான ஷாங்காயில் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அலுவலகங்கள், அத்தியாவசியமில்லாத அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: