வேங்கடமங்கலம் ஊராட்சியில் ரூ.25 கோடி அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் அதிரடி

கூடுவாஞ்சேரி: வேங்கடமங்கலம் ஊராட்சியில், ரூ.25 கோடி மதிப்புள்ள ஏரி நிலத்தை ஆக்கிரமித்து வீட்டு மனை பிரிவு அமைத்து விற்பனை வண்டலூர் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர். வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் ஊராட்சியில், ஏரியை ஆக்கிரமித்து, வீட்டு மனை பிரிவுகள் அமைத்து விற்பனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன. அதில் 8.94 ஏக்கர் நீர்நிலை பகுதியை, சிலர் வீட்டுமனைப் பிரிவுகளாக அமைத்து அதில் பிளாட் போட்டு, சாலை அமைத்து, பென்சிங் கற்கள் வைத்துள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இதைதொடர்ந்து வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த்துறையினர், வேங்கடமங்கலம் பெரிய ஏரியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, ஏரியை ஆக்கிரமித்து, வீட்டுமனை பிரிவுகளாக அமைத்து விற்பனை செய்தது தெரிந்தது.  இதையடுத்து அதிகாரிகள், அங்கிருந்த ஆக்கிரமிப்பு பென்சிங் கற்களை அகற்றி, அரசு நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு ரூ.25 கோடி என கூறப்படுகிறது.

Related Stories: