கோயில் விழாக்களில் பாகுபாடு இருக்கக் கூடாது: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

மதுரை: கோயில் திருவிழா கொண்டாடுவதில் எந்த பாகுபாடும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வெள்ளபொம்மன்பட்டி கோயில் விழாவில் பட்டியலின மக்கள் வழிபடும் வகையில் நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், வெள்ளபொம்மன்பட்டியில் உள்ள கோயில் விழாக்களில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 19-ல் நடைபெறவுள்ள கோயில் விழாவில் பட்டியலின மக்களும் வழிபட அனுமதி தர உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கில், திருவிழாவின்போது எந்த பிரச்சனையும் ஏற்படாமல் வருவாய்த்துறை, போலீசார் பார்த்துக் கொள்ள வேண்டும். சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோயில் விழாக்களில் பாகுபாடு இருக்கக் கூடாது: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: