கண்டம் விட்டு கண்டம் பாயும் மேலும் ஒரு ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த வடகொரியா : அதிபர் கிம் பங்கேற்ற படங்கள் வெளியீடு!!

வடகொரியா : வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனையை நடத்தி அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. வடகொரியாவின் Hwasong-17 பிரம்மாண்ட ஏவுகணை 2017ம் ஆண்டில் பேரணி ஒன்றில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதல் சோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டது. வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் சோதனையின் உடன் இருந்து வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். ஏவுகணை சோதனையின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.அணு ஆயுதங்களை இடைமறித்து அழிக்கும் திறனும் இந்த ஏவுகணைக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

வடகொரியாவில் இருந்து சுமார் 13,000 கிமீ பயணித்து அமெரிக்காவின் எந்த பகுதிகளிலும் இலக்குகளை குறிவைத்து துல்லியமாக தாக்கும் அளவிற்கு இந்த ஏவுகணை திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இதனால் வடகொரியாவின் ராணுவ கட்டமைப்பை இந்த ஏவுகணை பலப்படுத்தும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.கடந்த 2017ம் ஆண்டுக்கு பின்பு முதன்முறையாக, தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஏவுகணை பரிசோதனையை வடகொரியா நடத்தி உள்ளது என்று தென்கொரியாவும் கூறி உறுதி செய்துள்ளது.  இந்த சோதனையானது ஐ.நா.வின் விதிகளை மீறிய செயல் என தென்கொரிய அதிபர் மூன் கண்டனம் தெரிவித்துள்ளார் 

Related Stories: