மகளிர் உலக கோப்பை இங்கிலாந்து அபார வெற்றி வெளியேறுகிறது பாகிஸ்தான்

கிறைஸ்ட்சர்ச்: மகளிர் உலக கோப்பையில் 24வது லீக் ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின.டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை  தேர்வு செய்தது. இங்கிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாத  பாகிஸ்தான் 41.3ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 105ரன் மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சிதாரா அமீன் 32, சிதாரா நவாஸ் 23 ரன் எடுத்தனர். அதனையடுத்து 106ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்தின்  டம்மியை 2 ரன்னில் வெளியேற்றினார் டியனா.

ஆனால்  அடுத்து இணை சேர்ந்த டேனியலி 76*, கேப்டன் ஹீதர் 24* ரன் விளாசி, ஆட்டமிழக்காமல் இலக்கை எட்டினர். இங்கிலாந்து 19.2ஓவரில் 107ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில்  அபார வெற்றிப் பெற்றது. டேனியலி ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறி அரையிறுதி வாய்ப்பையும் அதிகரித்துள்ளது. ஒரே ஒரு வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறுகிறது.

Related Stories: