ஆறுமுகசாமி ஆணையம் ஓ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்க அப்போலோ மருத்துவமனை தற்போது எதிர்ப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கமளித்துவருகிறார். ஓ.பன்னீர்செல்வத்திடம் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்க அப்போலோ மருத்துவமனை தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜெயலலிதாவுக்கு இதயத்தில் இருந்த பிரச்னை தொடர்பாக ஆணையம் கேள்வியெழுப்பியபோது  அப்போலோ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இரண்டாவது நாள் விசாரணையின் போது ஆணையமானது நேரடியாக சில கேள்விகளை கேட்க விருப்பப்பட்டது. ஆணையம் விசாரித்திருக்க கூடிய விஷயங்களை தெரிவிக்கக்கூடிய வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இதயத்தில் பாதிப்பு இருந்தது குறித்து தெரியுமா என மருத்துவம் சார்ந்த சில கேள்விகளை எழுப்பிய போது, அதற்க்கு அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆறுமுகசாமி விசரனை ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வத்திடம்  2 நாட்களாக விசாரணை நடைபெற்று வரக்கூடிய நிலையில், மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறியிருந்தார். இதனால் அவரிடம் மருத்துவம் சார்ந்த கேள்விகளை எழுப்ப கூடாது என அப்போலோ வழக்கறிஞர் கூறியுள்ளார். ஏனென்றால் மருத்துவம் சார்ந்த கேள்விகளை எழுப்ப மெடிக்கல் போர்ட் அமைக்கப்பட்டுள்ளது, ஆனால் ஓ.பன்னீர் செல்வம் அவருக்கு தெரியாது என கூறியதற்கு பின்னதாக ஆணையம் இவ்வாறு கேள்வியெழுப்புவது சரியானதாக இருக்காது என அப்போலோ வழக்கறிஞர் தொடர்ச்சியாக தெரிவித்தார்.

ஆனால் அதற்க்கு ஆணையத்திடனுடைய வழக்கறிஞர் மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்கும் போது, மிக முக்கியமாக மருந்துகளின் விவரங்களோ, அவருக்கு இருக்க கூடிய பிரச்சனைகள் குறித்து கேட்கப்படவில்லை. அவருக்கு இருதய பாதிப்பு இருந்தது குறித்து தெரியுமா என்று மட்டுமே கேட்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் ஜெயலலிதாவுக்கு இருந்த நோய் தொடர்பாகவோ, அதற்க்கு எடுத்துக் கொண்ட மருந்துகள், சிகிச்சைகள் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து விசாரணை ஆணையமானது அடுத்தகட்ட விசாரணைக்கு சென்றது. அதில் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 4-ம் தேதி எவ்வாறான நிலையில் இருந்தார், அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது, அதற்க்கு பின்பாக எக்மோ கருவி பொருத்தப்பட்டது உள்ளிட்டவை தொடர்பாக விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories: