வேதாரண்யம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு நாற்றங்கால் விடும்பணி மும்முரம்-5,000 ஏக்கரில் நடவு செய்ய இலக்கு

வேதாரண்யம் : காவிரி டெல்டா பாசனப் பகுதிக்கு இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் குறுவை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வத்துடன் முதல்கட்ட பணிகளை செய்து வருகின்றனர்.கடைமடைப் பகுதியான நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு, காடசேத்தி, ஆய்மூர், வடுகூர், மணக்குடி, அக்கரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேரில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தற்போது நிலத்தடி நீரை பயன்படுத்தி நாற்றங்கால் அமைத்து பராமரிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் கடைமடை பகுதிக்கு தேவையான தண்ணீர் வந்து சேரும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் சுருப்பையா கூறுகையில்,தலைஞாயிறு பகுதியில் கடந்த ஆண்டு குறுவை சாகுபடி 1510 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் 5 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி நடைபெறும் என விவசாயத் துறையினர் தெரிவித்தனர்.தற்போது ஆடுதுறை45, அம்பாசமுத்திரம்16, திருப்பதிசாரம் 5 , டிகே 9 ஆகிய விதைநெல்கள் தலைஞாயிறு வேளாண்மை விரிவாக்க மையத்தில் தேவையான அளவு இருப்பு உள்ளது. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தனியார் விற்பனை நிலையங்களிலும் போதுமான அளவு உரங்கள் கையிருப்பில் உள்ளது என கருப்பையா தெரிவித்தார்….

The post வேதாரண்யம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு நாற்றங்கால் விடும்பணி மும்முரம்-5,000 ஏக்கரில் நடவு செய்ய இலக்கு appeared first on Dinakaran.

Related Stories: