இண்டியன் வெல்ஸ் டென்னிஸ்: அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் சாம்பியன்.! நடாலின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி

இண்டியன்வெல்ஸ்: அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வந்தது. இன்று அதிகாலை நடந்த ஆடவர் ஒற்றையர் பைனலில் 4ம் நிலை வீரரான ஸ்பெயினின் 35 வயது ரபேல் நடால், 24 வயதான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ்சுடன் மோதினார். முதல் செட்டை 6-3 கைப்பற்றினார். 2வது செட் டைப்ரேக்கர் வரை சென்ற நிலையில், டெய்லர் 7(7)-6(5) என தன்வசப்படுத்தி பட்டம் வென்றார். வெற்றிக்கு பின் பிரிட்ஸ் கூறுகையில், நடால் இருக்கும் இந்த இடத்தில் நான் இருப்பது மரியாதையாக உள்ளது. அவரின் ஆட்டத்தைபார்த்துதான் நான் வளர்ந்தேன். இந்தப் போட்டியை வெல்வது சிறுவயது கனவுகளில் ஒன்றாகும் என்றார்.

இதனால் நடாலின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மகளிர் ஒற்றையர் பைனலில் 3ம் நிலைவீராங்கனையான போலந்தின் 20 வயது இகா ஸ்வியாடெக், 6ம்நிலை வீராங்கனையான கிரீஸ் நாட்டின் 26 வயது மரியா சக்கரியுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-4என முதல் செட்டை கைப்பற்றினார். 2வது செட்டிலும் அதிரடிகாட்டிய அவர் 6-1 என எளிதாக தன்வசப்படுத்தினார். முடிவில் 6-4,6-1 என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றி மூலம் அவர் டபிள்யூடிஏ தரவரிசையில் 3வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறினார்.

Related Stories: