மணிப்பூர் மாநில முதலமைச்சராக பைரேன் சிங் தேர்வு: இம்பாலில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு.!

இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக பைரேன் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனை சந்தித்து பைரேன் சிங் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.  இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களை பாஜக கைப்பற்றியது. பஞ்சாப்பில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி அபாரமாக வெற்றிப்பெற்று முதல் முறையாக ஆட்சி அமைத்தது.

பாஜக 4 மாநிலங்களில் வெற்றி பெற்றாலும், இன்னும் எந்த மாநிலத்திலும் ஆட்சி அமைக்கவில்லை. உத்தர பிரதேச முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியானது. உத்தரகாண்ட், கோவா மாநிலத்தில் இன்னும் முதல்வர் யார் என்று முடிவு செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் முதல்வராக பிரேன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பிரேன் சிங் சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி, மாநில கவர்னர் இல. கணேசனை பிரேன் சிங் சந்திக்க உள்ளார்.மணிப்பூர் மாநிலத்தின் அடுத்த முதல்வராக யார் அறிவிக்கப்படுவார் என்ற கேள்விகள் கடந்த ஒருவாரமாக அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில்,  இன்று கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

Related Stories: