காயமுற்ற, கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்க மாவட்டம் தோறும் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் அமைக்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு!!

சென்னை : தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2வது காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை நிகழ்த்தினார். நிதியமைச்சரின் உரையில், கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த அறிவிப்புகளை பார்க்கலாம்.. அப்போது, வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் என்ற திட்டம் ஒன்று தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பேசிய நிதியமைச்சர், “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலார் அவர்களின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு,ஆதரவில்லாத கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில்தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.இம்மதிப்பீடுகளில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு 1,314.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

Related Stories: