திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் காணிக்கை உண்டியல்கள் திறப்பு

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயில் உண்டியல் 3 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு, அதில் பக்தர்கள் போடும் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். இதையொட்டி, நேற்று காலை கந்தசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 12 உண்டியல்கள், இந்து சமய அறநிலையத்துறை செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், கோயில் செயல் அலுவலர் சக்திவேல், ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதில், ரூ.54,17,316 ரொக்கம், 354 கிராம் தங்கம், 4,750 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது தெரிந்தது.

Related Stories: