திருவனந்தபுரத்தில் மாணவர் அமைப்பினர் இடையே மோதல்: கேரள மாணவ சங்கத்தலைவி மீது சரமாரி தாக்குதல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இடதுசாரி மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. சங்கத்தினருக்கும், காங்கிரஸ் சார்பு அமைப்பான கேரள மாணவ சங்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள சட்டக்கல்லூரில் நேரிட்ட மோதலில் கேரள மாணவ சங்கத்தின் தலைவி சப்னா யாகூப்பை எஸ்.எப்.ஐ. சங்க உறுப்பினர்கள் சரமாரியாக தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோதலில் தாக்கப்பட்ட கேரளா மாணவ சங்கத்தின் தலைவி உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து சப்னா யாகூப் கூறியபோது, சட்டக்கல்லூரியில் கேரள மாணவர் சங்கம் கிளை தொடங்கி உள்ளோம்.

நிகழ்ச்சி நடந்த பிறகு எஸ்.எப்.ஐ. மாணவர் சங்க நிர்வாகிகள், எங்களை தடுத்து தாக்கினர். என்னை தரதரவென இழுத்துச் சென்று தாக்கினர். இதற்கு முன்பு இதுபோன்ற தாக்குதல் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக சட்டக்கல்லூரி நிர்வாகத்தில் புகார் கொடுத்தோம். கல்லூரி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார். இந்த மோதல் சம்பவத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி செய்துள்ளார். சட்டமன்றத்தில் பேசிய அவர், மோதலில் இரு சங்கத்தின் உறுப்பினர்கள் காயமடைந்ததாக கூறினார். மோதல் தொடர்பாக மியூசியம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.      

Related Stories: