நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விரைவில் விலக்கு கிடைக்காது: பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விரைவில் விலக்கு கிடைக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீட் விலக்கு மசோதா ஏற்கனவே குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட ஒன்று. 2ம் முறை மசோதா சென்றுள்ள நிலையில், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது தான் ஆளுநரின் கடமை. அவரும் அதைத்தான் சொல்லியிருக்கிறார். இதில் புதிதாக சொல்ல எதுவுமில்லை. மாநில பட்ஜெட்டில் வரி உயர்வு இருக்க வாய்ப்புள்ளது. அதை எதிர்த்து பாஜக போராடும். கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளுக்கு மட்டுமே ஹிஜாப் அணிந்து செல்லவே தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் காலம் காலமாக ஹிஜாப் தடை செய்யப்பட்டுள்ளது. வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட முதல் ரெய்டுக்கே இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதில் இன்னொரு ரெய்டு ஏன்? இதுவரை நடத்தப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட எந்த ரெய்டுகளுக்கும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.

Related Stories: