குமரி ஆயுதப்படை மைதானத்தில் 200 புதிய போலீசாருக்கு பயிற்சி: எஸ்.பி. தொடங்கி வைத்தார்

நாகர்கோவில்: நாகர்கோவில், மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2ம் நிலை காவலர்களுக்கான பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த பயிற்சியை எஸ்.பி. பத்ரி நாராயணன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், காவலர் பணி என்பது உன்னத பணி ஆகும். எனவே பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். பயிற்சியில் கஷ்டங்கள் இருக்கும். அதை மகிழ்ச்சியோடு ஏற்று  செயல்பட வேண்டும். நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தார் காவல் நிலையங்களுக்கு செல்லும் போது காவல்துறையினர் எப்படி நடந்து ெகாள்ள வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதே அணுகுமுறையுடன் தான் பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.

பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்வதே முதல் பணி ஆகும். காவல்துறையினர் குறை தீர்க்க மாதம்தோறும் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும். இந்த பயிற்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்டு தமிழக காவல்துறைக்கு நல்ல பெயர் பெற்று தர வேண்டும் என்றார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 200 காவலர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

Related Stories: