ஊத்துக்கோட்டை: சீத்தஞ்சேரி கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கினார். ஊத்துக்கோட்டை அருகே சீத்தஞ்சேரி கிராமத்தில் பூண்டி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சுப்பிரமணி, துணைச்செயலாளர் நாகராஜ், நிர்வாகிகள் ரகு, தேவி, வக்கீல் வெஸ்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.