மகளிர் உலக கோப்பை ஆஸி. ஹாட்ரிக் வெற்றி: நியூசி. ஏமாற்றம்

வெலிங்டன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில், நியூசிலாந்துடன் மோதிய ஆஸ்திரேலியா 141 ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்தது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. ஆஸ்திரேலியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன் குவித்தது. ரச்சேல் 30, எலிஸ் பெர்ரி 68, பெத் மூனி 30, டாஹ்லியா 57, ஆஷ்லி கார்ட்னர் 48* ரன் விளாசினர். இதையடுத்து, 50 ஓவரில் 270 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.

ஆஸி. வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அந்த அணி 30.2 ஓவரில் 128 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. சூஸி பேட்ஸ் 16, அமி சாட்டர்த்வெய்ட் 44, கேத்தி மார்டின் 19, டஹுஹு 23 ரன் எடுக்க, மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். ஆஸி. பந்துவீச்சில் டார்சி பிரவுன் 3, அமண்டா, கார்ட்னர் தலா 2, பெர்ரி, டாஹ்லியா, ஷுட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். எலிஸ் பெர்ரி சிறந்த வீராங்கனை விருது பெற்றார். 141 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்திய ஆஸி. 6 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தலா 4 புள்ளிகளுடன் அடுத்த இடங்களில் உள்ளன. இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் (0) பின்தங்கியுள்ளன.

Related Stories: