மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு கள்ளன் படக்குழுவினர் உதவி

சென்னை: கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான நா.முத்துக்குமார், கடந்த 2016ல் தனது 41வது வயதில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். ‘கஜினி’ படத்துக்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்ற நா.முத்துக்குமார், பிறகு ‘தங்கமீன்கள்’, ‘சைவம்’ ஆகிய படங்களுக்காக தேசிய விருது பெற்றார். நடிகர் சிவகார்த்திகேயன் அவ்வப்போது திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதன் மூலம் கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார். இந்நிலையில், எழுத்தாளர் சந்திரா இயக்கத்தில் கரு.பழனியப்பன் ஹீரோவாக நடித்துள்ள ‘கள்ளன்’ என்ற படத்தின் ஆடியோ உரிமையை விற்றதன் மூலம் கிடைத்த 4 லட்சம் ரூபாயை, நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு வழங்கியுள்ளதாக தயாரிப்பாளர் மதியழகன் தெரிவித்தார்.

Related Stories: