கருணை அடிப்படையில் முஸ்லிம் ஆயுள் சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ மாநில தலைவர் பேட்டி

சென்னை: முஸ்லிம் ஆயுள்  சிறை கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார். சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று அளித்த பேட்டி:

5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் ‘மதச்சார்பற்ற’ கட்சிகள் என்று அழைக்கப்படும் கட்சிகளின் பலவீனத்தையும், திறமையின்மையையும் அம்பலப்படுத்துகிறதே தவிர, பாஜவின் வெற்றியை அல்ல.பேரறிவாளன் ஜாமீன் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டும், அமைச்சரவை தீர்மானத்தையும் கருத்தில் கொண்டும் தான் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, தமிழக சிறைகளில் நீண்ட நாள் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுள் சிறைக் கைதிகளுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும்.

அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய, கமிஷன்களை அமைப்பதை தாண்டி, அமைச்சரவை தீர்மானத்தை இயற்றவும் முன்வர வேண்டும். உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இவ்வாறு அவர் கூறினார். மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் எம்.நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில செயலாளர்கள் அபுபக்கர் சித்தீக், ரத்தினம், ஏகே.கரீம், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: