விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி முடிவு

புதுடெல்லி: விஜய் மல்லையாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்றைக்கு ஒத்திவைத்துள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். பணப் பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மீறி தனது பிள்ளைகளுக்கு விஜய் மல்லையா பணப் பரிவர்த்தனை செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில்  கடந்த 2014ம் ஆண்டு அவர் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கை  நீதிபதிகள் யூயூ லலித், ரவீந்திர பட், பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வு  விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக பலமுறை வாய்ப்பளித்தும் விஜய் மல்லையா இதுவரை நேரில் ஆஜராகவில்லை.  தனிப்பட்ட முறையிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாக ஆஜராகும்படி 2 வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடைசி வாய்ப்பு வழங்கியது. அவ்வாறு செய்ய தவறினால் நீதிமன்றம் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டியிருக்கும் என நீதிபதிகள் எச்சரித்தனர். இந்நிலையில், இந்த அவமதிப்பு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்றைக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுவதற்கான வாய்ப்புகள்  இருப்பதாக கருதப்படுகிறது.

Related Stories: