சத்தீஸ்கர் கேப்டன் ஹர்பிரீத் போராட்டம்

கவுகாத்தி: தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில், சத்தீஸ்கர் அணி கேப்டன் ஹர்பிரீத் சிங் கடுமையாகப் போராடி சதம் விளாசினார். எனினும், தமிழக அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 470 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அபராஜித் 166, இந்திரஜித் 127, ஷாருக் கான் 69 ரன் விளாசினர். 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்திருந்த சத்தீஸ்கர் அணி, நேற்று ஆட்டத்தை தொடர்ந்தது. தமிழக வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஷஷாங்க் 2, அஜய் மண்டல் 35, ஷாபாஸ் உசேன் (0) விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு முனையில் உறுதியாகப் போராடிய கேப்டன் ஹர்பிரீத் சதம் விளாசி அசத்தினார். சத்தீஸ்கர் 3ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 261 ரன் எடுத்துள்ளது. ஹர்பிரீத் 149 ரன் (322 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்), வீர் பிரதாப் சிங் 3 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: