ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றிய அமமுக: பரப்புரை செய்யாத நிலையில் வெற்றியை ஈட்டிய டிடிவி

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொள்ளாத நிலையில் அக்கட்சி 1 பேரூராட்சியை கைப்பற்றி இருக்கிறது. நகர்ப்புற தேர்தலில் மொத்தம் 99  இடங்களில் வெற்றி கண்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தலைவியை அமமுக ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் பெரிய அளவில் வெற்றியை ஈட்டவில்லை. தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக தனித்து போட்டியிட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரையில் டிடிவி தினகரன் ஈடுபடாத நிலையில், அக்கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 3 இடங்களிலும், நகராட்சி வார்டு உறுப்பினார் பதவிகளில் 33 இடங்களிலும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 66 இடங்களிலும் அக்கட்சி வெற்றி கண்டுள்ளது. வேலூர், விழுப்புரம், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, நெல்லை, தஞ்சை, கன்னியாகுமரி, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி வார்டுகளில் 66 இடங்களில் அமமுக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை  கைப்பற்றி இருக்கிறது. அங்கு மொத்தமுள்ள 15 வார்டுகளில் 9 இடங்களில் அமமுக வெற்றி பெற்றுள்ளது.       

Related Stories: