ஆப்கானுக்கு இந்தியா 2,500 டன் கோதுமை: பாக். வழியாக லாரிகளில் சென்றது

புதுடெல்லி:  இந்தியாவில் இருந்து பாகிஸ்தானின் சாலை மார்க்கமாக ஆப்கானிஸ்தானுக்கு 2500 டன் கோதுமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியபிறகு அந்நாட்டில் வேலையின்மை, வறுமை, பட்டினி என பொதுமக்கள் மிகுந்த அவலை நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், இந்திய அரசு சார்பாக ஆப்கனுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றது. 50 ஆயிரம் டன் கோதுமையை ஆப்கனுக்கு அனுப்பி வைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. பாகிஸ்தானின் சாலை மார்க்கமாக கோதுமையை அனுப்பி வைப்பதற்காக அந்நாட்டு அரசிடம் கடந்த அக்டோபர் 7ம் தேதி அனுமதி கோரப்பட்டது. இதற்கு கடந்த நவம்பர் 24ம் தேதி பாகிஸ்தான் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து முதல் கட்டமாக நேற்று 2,500 டன் கோதுமை அமிர்தசரசில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. வெளியுறவு துறை செயலாளர் ஹர்ஷ் வரதன் கோதுமை ஏற்றி செல்லும் லாரிகளை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

Related Stories: