ராமதாஸ் கோரிக்கை பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ்வழி கல்வி கட்டாய சட்டம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக அறிவித்து, 2006ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் நீதிமன்றங்களின் தலையீட்டால் செயல்பாடின்றி கிடக்கிறது. இத்தகைய சூழலில் தாய்மொழி நாளை பெயரளவில் கொண்டாடுவது வலியைத் தருகிறது. தமிழ்நாட்டிலும் உயர்கல்வி வரை தமிழ் மொழியில் கற்பிக்கப்படும் நாள் தான் தமிழர்களுக்கு பொன்நாள். எனவே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாயப்பாடமாக்கும் சட்டத்தை செம்மையாக செயல்படுத்தவும், தமிழ் கட்டாயப்பாடம் என்பதை 12ம் வகுப்பு வரை நீட்டிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

Related Stories: