பஜ்ரங் தளம் தொண்டர் குத்திக் கொலை: கர்நாடகாவில் பதற்றம்

பெங்களூரு: கர்நாடகாவில் பஜ்ரங் தளம் தொண்டர் ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் நேற்றிரவு 9 மணியளவில் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த ஹர்ஷா (26) என்பவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தால் ஷிவமோகாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஹர்ஷா, தனது பேஸ்புக் பக்கத்தில் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிதல் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார்.

அதனால், முன்விரோதம் காரணமாக மற்றொரு கும்பலால், ஹர்ஷா கொல்லப்பட்டிருக்கலாம் என்பது ெதரியவந்துள்ளது. முன்னதாக கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் முகரம் கான் என்பவர், ஹிஜாப் அணிவதை எதிர்ப்பவர்கள் துண்டு துண்டாக வெட்டப்படுவார்கள் என்று கூறிய வீடியோ வைரலானது. அதையடுத்து அவர் மீது ஐபிசி பிரிவு 153(A), 298 மற்றும் 295ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: