கோவை வெள்ளலூர் சந்தைக்கடை பகுதியில் குடத்தில் சிக்கிய நாயின் தலையை மீட்ட பொதுமக்கள்

கோவை: கோவை வெள்ளலூர் சந்தைக் கடை பகுதியில் பிளாஸ் குடத்தின் நீரைக் குடிப்பதற்காக நாய் ஒன்று தனது தலை யைக் குடத்துக்குள் விட்ட நிலையில், அதன்பிறகு தனது தலையை வெளியே எடுக்கமுடியாமல் பெரும் அவதிப்பட்டது. கோவை அடுத்த வெள்ளூரில் சந்தைக் கடை சாலை யோரம் சுற்றித்திரிந்த நாய் ஒன்று சாலை பைப் அருகே வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடத்திற்குள் தண்ணீர் குடிப்பதற்காகத் தலையை விட்டுள்ளது.

அதன்பிறகு அதனால் தலையை வெளியே எடுக்கமுடியாமல் அரை மணிநேரமாக குடத்துடன் அங்கும் இங்குமாக கண் மூடித்தனமாக ஓடியுள்ளது. அந்தப் பகுதி மக்கள் பிளாஸ்டி குடத்தை லாவகமாக வெட்டி, குடத்தில் சிக்கிய நாயின் தலையை வெளியே மீட்டனர். இந்தச் சம்பவத்தால் மிரண்டு போயிருந்த நாய், தன்னை விடுவித்ததும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடி மறைந்தது.

Related Stories: