ஏற்கனவே நியமித்த குழு மாற்றியமைப்பு மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைப்பு: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எய்ம்ஸ் இயக்குனர் அனுப்பியதாக தகவல்

சென்னை: எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த  குழுவை மாற்றியமைத்து தற்போது மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் 6 பேர் கொண்ட குழு  அமைக்கப்பட்டுள்ளதாக ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எய்ம்ஸ் இயக்குனர் கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு, பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சசிகலா தரப்பு, அப்போலோ மருத்துவமனை தரப்பினர்களிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்று ஆலோசனையில் ஈடுபட்டது. இதனிடையே ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு  மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டதற்கான  கடிதத்தை ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எய்ம்ஸ் இயக்குனர் அனுப்பியுள்ளார்.  ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த  குழுவை மாற்றியமைத்து தற்போது மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் குழு  அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. முந்தைய குழுவில் 8 மருத்துவர்கள்  இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது அமைக்கப்பட்ட குழுவில் 6 மருத்துவர்கள்  இடம் பெற்றுள்ளனர். இந்த ஆலோசனைக்கு பிறகு சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆணையம் விசாரணையை தொடங்கிய 10 நாட்களுக்குள் தங்களது முழு பணியையும் தங்கள் தரப்பு முடித்து விடும் என்று உறுதி அளித்தார்.

மேலும் ஆணையம் யார் யாரெல்லாம் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தது அவர்களை அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று அதை ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் ஆணையத்தில் சசிகலா தரப்பினர் இன்று ஆலோசனைகள் விவாதிக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் 22ம் தேதி எழுத்துப் பூர்வமான தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. அப்போலோ மருத்துவமனையும் அன்றைய தினத்தில் இதைபோன்று ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: