ராணுவ பணியாளர்களுக்கு யோகா, தியான பயிற்சி

சென்னை: ராணுவ பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி விழிப்புணர்வு நடத்தப்பட்டது.  சர்வதேச யோகா தினம், நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, ஆவடி ராணுவ பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர், அன்றாட வாழ்வில் யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை ஊக்குவித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று ஆவடி ராணுவ பயிற்சி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில், பிரம்ம குமாரிகள் யோகா மற்றும் தியான பயிற்சி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், ஆவடி ஆயுத கிடங்கு பணியாளர்களின் குடும்பங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். யோகா ஆசன பயிற்சி அனைவரையும் ஊக்குவித்து, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியாகும். மேலும், வாழ்க்கை முறையால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளை குறைக்க யோகா பயிற்சி தொடர்வது குறித்து ராணுவ படையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

The post ராணுவ பணியாளர்களுக்கு யோகா, தியான பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: