சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : விளக்கமளித்த சிஎஸ்கே சிஇஓ!

சென்னை : 15-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்பேன் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காதது குறித்து அந்த அணி சிஇஓ காசி விஸ்வநாதன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கடந்த 12 ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருபவர் சுரேஷ் ரெய்னா. அவரை அணியில் எடுக்க முடியாத சூழலை கடப்பது கடினமாக இருந்தது. அதே நேரம், ஓர் அணியை கட்டமைக்க வேண்டும் என்றபோது ஃபார்ம் மிக முக்கியம். மேலும், இனி சிஎஸ்கேவில் அவர் ‘ஃபிட்டாக’ மாட்டார் என்ற காரணத்திற்காக அவரை தேர்ந்தெடுக்கவில்லை” என தெரிவித்திருக்கிறார்.

ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னாவை 2018-ம் ஆண்டு மீண்டும் சிஎஸ்கே அணி தக்கவைத்தது. அந்த 2018-ம் ஆண்டு தொடரில் சிஎஸ்கே அணி மீண்டும் திரும்ப வந்த போது 15 போட்டிகளில் விளையாடி 445 ரன்கள் அடித்தார். எனினும் 2019-ம் ஆண்டு முதல் இவர் சொதப்ப தொடங்கினார். அந்த ஆண்டு நடைபெற்ற 17 போட்டிகளில் விளையாடி 383 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சொந்த காரணங்களுக்காக இவர் திடீரென விலகினார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் இவர் 160 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால், இளம் வீரர்களை மாற்று வீரர்களாக கண்டுகொண்ட சிஎஸ்கே அணி, ரெய்னாவை தேர்வு செய்யவில்லை என தெரிகிறது.

Related Stories: