சித்தூர் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

சித்தூர் : சித்தூர் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சித்தூர் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் நானி உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது: முதல்வர் ஜெகன்மோகன் மாநிலத்தை பிரதமர் மோடியிடம் அடமானம் வைத்து விட்டார். கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பாதை யாத்திரை மேற்கொண்டார். அப்போது, மாநிலத்திற்கு தனி அந்தஸ்து வழங்கும் வரை போராடுவேன். அதற்கு மாநிலத்தில் 25 எம்பிக்கள் பலம் வேண்டும். ஆகவே, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் நான் மத்திய அரசை வற்புறுத்தி மாநிலத்திற்கு தனி அந்தஸ்து பெற்று தருவேன் என வாக்குறுதி அளித்தார். இதனால், மக்கள் அனைவரும் ஆளும் கட்சி அரசுக்கு வாக்களித்தனர்.

அதில், 22 எம்பிகளை வெற்றி பெற செய்தார். ஆனால், முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சி பொறுப்பேற்று 3 வருடங்கள் நெருங்கி உள்ள நிலையில் இதுவரை மத்திய அரசிடம் தனி அந்தஸ்து வழங்கக்கோரி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாராளுமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது மனுவை பிரதமர் மோடி நிராகரித்து விட்டார். மத்திய அரசுக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலையை தனியார் மயமாக்க விருப்பம் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து நலத்திட்டங்களையும் வரவேற்பு தெரிவிக்க வேண்டும். மத்திய அரசை எதிர்த்து முதல்வர் ஜெகன்மோகன் எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிப்பதில்லை.

படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன். அரசு பணியில் காலியாக உள்ள 2 லட்சத்து 10 ஆயிரம் பணியிடங்களை பூர்த்தி செய்வேன் என வாக்குறுதி அளித்தார். தற்போது அவர் கொடுத்த வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றவில்லை. தேர்தலின்போது மாநிலத்திற்கு தனி அந்தஸ்து பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தார். அதன் மீது தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, ஆளும் கட்சி அரசு சார்பில் மாநிலத்திற்கு  தனி அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டும். வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.அப்போது, எம்எல்சி துரைபாபு, முன்னாள் எம்எல்ஏ சீனிவாஸ், மண்டல தலைவர் மோகன்ராஜ், துணை தலைவர் மேஷாக், முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: