கில்கிறிஸ்டைபோல் எதற்கும் அஞ்சாதவன் ரிஷப் பன்ட்; ரிக்கிபாண்டிங் சொல்கிறார்

மும்பை: இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 3 வகையான கிரிக்கெட் தொடர்களிலும் அசத்தலாடி ஆடி தகுதியான விக்கெட் கீப்பராக உருவெடுத்துள்ளார். குறிப்பாக இந்தியா போன்ற ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு எப்போதுமே சவாலாக இருக்க கூடிய இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய மண்ணில் டெஸ்ட் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பராக அவர் சரித்திர சாதனை படைத்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் வெறும் பந்தை பிடித்து போடுபவர்கள் அல்ல என உலகிற்கு நிரூபித்துக் காட்டியவர் டோனி. ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட், ேடானி ஆகியோரின் வரிசையில் ஒரு தரமான விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் உருவெடுத்துள்ளார் என ஏற்கனவே பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள்.  

அதிலும் குறிப்பாக ஆடம் கில்கிறிஸ்ட் போல இடது கை பேட்டிங் செய்யும் விக்கெட் கீப்பராக விளங்கும் ரிஷப் பன்டை அடுத்த ஆடம் கில்கிறிஸ்ட் என சமீப காலங்களாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதுபற்றி ஐசிசியின் அதிகாரபூர்வ பக்கத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது: கில்கிறிஸ்ட்,  ரிஷப் பன்ட் இருவரும் ஏறக்குறைய ஒரே வகையானவர்கள். ரிஷப் பன்ட் அதிரடியாக விளையாட கூடியவர் என்பது எனக்கு தெரியும். ஆனால் ஒரு ஆல்-டைம் சிறந்த விக்கெட் கீப்பருடன் ஒப்பிடுவதற்கு முன்பாக அவரை 50  60 டெஸ்ட் போட்டிகளில் விளையாட விடுங்கள்.

அப்போதுதான் இந்த ஒப்பீடு பற்றி ஒரு முழுமையான கருத்தை கூற முடியும். மேலும் ரிஷப் பன்ட் எப்போதும் அதிகமாக கூச்சலிட்டுக் கொண்டு போட்டிபோட கூடிய ஒருவராக உள்ளார். கில்கிறிஸ்ட்டும் அதே மாதிரியானவர் தான். ஆனால் கில்கிறிஸ்ட் சற்று அமைதியாக இருப்பதுடன் பேட் கையில் கிடைத்தால் ரிஷப் பன்ட் போல அதிரடி காட்டக்கூடியவர். இருப்பினும் தற்போதைய நிலைமையில் ஆடம் கில்கிறிஸ்ட் போலவே ரிஷப் பன்ட் விளையாடி வருகிறார். ஆடம் கில்கிறிஸ்ட் போலவே எந்த சூழ்நிலையிலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அணிக்காக அதிரடியாக விளையாட கூடியவராக ரிஷப் பன்ட் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். ஐபிஎல் தொடரில் ரிக்கி பாண்டிங் தலைமையில் ரிஷப் பன்ட் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: