முட்புதர்கள் அடர்ந்துள்ள ஆதி திருவரங்கம் பெருமாள் கோயில் தீர்த்தக்குளத்தை சீரமைக்க கோரிக்கை

ரிஷிவந்தியம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த ஆதி திருவரங்கத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் மிக பழமை வாழ்ந்த அரங்கநாத பெருமாள் கோயில் அருகில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் தீர்த்தக்குளம் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அறநிலையத்துறை சார்பில் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் செலவில் குளத்தின் 4 பக்கமும் கருங்கல் சுவர் அமைக்கப்பட்டது. இந்நிலையில் 2020ம் ஆண்டு புயலுடன் தொடர் மழை கொட்டி தீர்த்ததால், கோயிலின் தீர்த்தக் குளத்தின் ஒரு பக்கம் கருங்கல் சுவர் இடிந்து மண்சரிவு ஏற்பட்டது.

அதையடுத்து தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து மேலும் மண்சரிவு ஏற்படாத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டது. அதன்பின் கடந்த ஓராண்டாக எந்தவொரு சீரமைப்பு பணியும் செய்யாததால், முட்புதர்கள் அடர்ந்து விஷ ஜந்துகளின் புகலிடமாக காணப்படுகிறது.

அதனால் அப்பகுதியில் உள்ள குடும்பங்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பழமை வாய்ந்த இக்கோயில் தீர்த்த குளத்தை சீரமைத்து குளத்தில் நீர் நிரப்ப வேண்டும் என கோயிலுக்கு வரும் பக்தர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: