லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. முதல் டெஸ்ட் மார்ச் 8ம் தேதி ஆண்டிகுவாவில் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஷஸ் தொடரில் படுதோல்வியை சந்தித்த நிலையில் ஜோ ரூட் கேப்டனாக நீடிக்கிறார். முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட் நீக்கப்பட்டுள்ளனர்.