மேகாலயாவில் 5 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் விலகல்

ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆளும் மேகாலயா ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளனர். மேகாலயாவில் பாஜ.வின் ஆதரவுடன் மேகாலயா ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மேகாலயா சட்டப்பேரவையில் 17 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் முகுல் சங்மா உட்பட 12 எம்எல்ஏ.க்கள் விலகி, திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். இந்நிலையில், சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி எம்எல்எக்களின் எண்ணிக்கை ஐந்தாக இருந்து வந்தது. ஆனால், இந்த 5 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆளும் மேகாலயா ஜனநாயக கூட்டணியில் நேற்று இணைந்தனர்.

முதல்வர் கான்ராட் சங்மாவிற்கு ஆதரவு அளிப்பதாக கடிதத்தின் மூலம் தெரியப்படுத்தி உள்ளனர். மேலும், இந்த கடிதத்தில் நகல் கட்சியின் தலைவர் சோனியாவிற்கும் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆளும் கட்சியில் இணைந்ததால் தற்போது எதிர்கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே உள்ளது.

Related Stories: