கள்ளக்குறிச்சி அருகே பொதுமக்களுக்கு முக கவசம் கொடுத்து வாக்குகளை சேகரிக்கும் திமுக வேட்பாளர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தியாகதுருகம் 6வது வார்டு வேட்பாளர் அஜித்குமார் பொதுமக்களுக்கு முக கவசம் கொடுத்து வாக்குகளை சேகரித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேரூராட்சியில் 6-வது வார்டு பகுதியில் இளம் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் அஜித்குமார் தனது வார்டுக்கு உட்பட்ட பெரியமாம்பட்டு கிராமத்தில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முகக்கவசத்தை மாலையாக அணிவித்து திமுக வேட்பாளர் அஜித்குமார் வீடு வீடாக சென்று முகக்கவசங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு உள்ள நியாய விலைக்கடையில் நின்றிருந்த பொதுமக்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி கூறி அறிவுரைகளை வழங்கி தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

Related Stories: