தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு சட்ட பாதுகாப்பு தருவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: வௌிநாடுகளை சேர்ந்த பைசர், மாடர்னா கொரோனா  தடுப்பூசி நிறுவனங்கள், தங்கள் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்துவதாக இருந்தால், தங்கள் நிறுவனங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரியுள்ளன. அதாவது, இந்தியாவில் இவற்றின் தடுப்பூசிகளை பயன்படுத்தி யாருக்காவது பாதிப்பு, உயிரிழப்பு போன்றவை ஏற்பட்டால், இவற்றிடம் நஷ்டஈடு கோர முடியாது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் இதேபோன்ற சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்து அளிக்கும் சீரம் நிறுவனமும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. இது பற்றி நிதி ஆயோக்கின் சுகாதார குழு  உறுப்பினர் விகே.பால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘குறிப்பிட்ட சில  நிறுவனங்கள்தான் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. அவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.  தடுப்பூசி நிறுவனங்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த  முடிவும் எடுக்கவில்லை,” என்றார்….

Related Stories: