கேரள மாநிலம் கொச்சியில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழை; 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப்பொழிவு பதிவு!

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் மேகவெடிப்பால் கனமழை பெய்து வருகிறது. 1.30 மணி நேரத்தில் 98.5 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. சாலைகளில் மழை நீர் ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இன்று காலை பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழையால் எடப்பள்ளி, காக்கநாடு, இன்போபார்க், சஹோதரன் அய்யப்பன் சாலை, எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலையம், கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையம், பாலரிவட்டம், கலூர் ஆலுவா, திருக்காக்கரா, களமச்சேரி, திரிபுனித்துரா, கோட்டை கொச்சி, தோப்பும்பட்டி, மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கொச்சியில் மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்ததாகவும், காலை 9.10 முதல் 10.10 மணி வரை 98.5 மிமீ மழை பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டல ரேடார் ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ் அபிலாஷ் கூறினார்.

கனமழை காரணமாக பல வீடுகள் காலையில் வெள்ளத்தில் மூழ்கியது. இன்று காலை ஃபோர்ட் கொச்சியில் ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து KSRTC பேருந்து மீது விழுந்தது. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மரத்தை அகற்றி அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர்.

The post கேரள மாநிலம் கொச்சியில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழை; 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப்பொழிவு பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: