ஆவடி மாநகராட்சியில் ஒரே நாளில் 300 பேர் வேட்புமனு தாக்கல்; திருநின்றவூரில் 156 பேர் மனுத்தாக்கல்

ஆவடி: ஆவடி, மாநகராட்சி, ஒரே நாளில் 300 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால், தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்து உள்ளது.  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ம்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி இன்று (4ந்தேதி) வரை நடைபெற்றது.  இதனை அடுத்து, ஆவடி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் வேட்புமனு தாக்கல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும், நேற்று ஒரே நாளில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தை, சிபி.எம், சி.பி.ஐ, தேமுதிக,  மக்கள் நீதி மையம், மதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக, எஸ்டிபிஐ மற்றும் சுயேட்சைகள் உள்பட 300க்கு மேற்பட்டோர்கள் மனு தாக்கல் செய்தனர்.

இது வரை மொத்தத்தில் ஆவடி நகராட்சியில் 500க்கு மேற்பட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர். அதேபோல திருநின்றவூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தை, பாமக, பாஜக, சி.பி.ஐ, சி.பி.எம், தேமுதிக, அமுமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மையம் மற்றும் சுயேச்சைகள் உள்பட இது வரை மொத்தம் 156 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மேலும், அம்பத்தூர் மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ், சிபி.ஐ, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம், பாமக, தேமுதிக, அமுமுக மற்றும் சுயேச்சைகள் உள்பட 285 பேர் இது வரை  மனு தாக்கல் செய்தனர். 

Related Stories: