திருச்சுழியில் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது திறப்பு விழா காணாமலே சிதிலமாகும் அம்மா பூங்கா

திருச்சுழி: திருச்சுழியில் இளைஞர்கள், சிறுவர்கள் மாலை மற்றும் காலை நேரங்களில் உடற்பயிற்சிகள் செய்யவும், வாலிபால், டென்னிஸ், டென்னிகாட் போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழவும்,பெரியவர்கள் மன அமைதி பெற பூங்காக்கள் அமைக்க வலியுறுத்தியதால் 2016- 2017ம் ஆண்டு தாய்திட்டத்தின் கீழ் திருச்சுழி தாலுகா அலுவலகம் முன்பாக அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.ஆனாலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரப்படாமல் பூங்கா மூடப்பட்ட நிலையில் முற்றிலும் விளையாட்டு பொருட்கள் சிதலமடைந்து கிடக்கிறது. இதனால் இங்கு வரும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பூங்கா மூடியுள்ளத்தை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே, விரைவில் அம்மா பூங்காவை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து திருச்சுழியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `` திருச்சுழியில் புதியதாக இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை தூண்டுவதோடு, ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை உருவாக்குவதற்கு புதியதாக பல லட்ச ரூபாய் செலவில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. இளைஞர்களுக்கிடையே பெரும் ஆர்வத்தை துண்டியுள்ளது. பெரும்பாலான கிராமங்களில் உள்ள விளையாட்டு திடல்கள் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உருக்குலைந்து கிடக்கின்றன. ஒரு சில பகுதியில் கிராமத்தினரே எதிர்கால சந்ததிகளின் நன்மைக்காக தாங்களாகவே பணத்தை செலவு செய்து பராமரித்து வருகின்றனர். பல பகுதிகளில் போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில் இத்தகைய திடல்கள் புதர் மண்டிய நிலையில் பரிதாபமாக உள்ளது.

உபகரணங்களும் சேதமடைந்து உள்ளன. விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் இத்தகை திடல்களில் விளையாடுவதை பார்க்கும் இளைஞர்களுக்கும், விளையாட்டு, உடற்பயிற்சி மீதான ஆர்வம் இயல்பாக உருவாகும் என்பதால், இத்தகை திடல்களை புதுப்பிக்க அரசு முன்வர வேண்டும். அதேபோன்று திருச்சுழி அமைக்கப்பட்ட விளையாட்டு திடல் பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராமலே உபகரணங்கள் சேதமடைந்து உள்ளதால் இளைஞர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது’’ எனக் கூறினர்.

Related Stories: