பேட்மேன் படத்தின் காட்சி இணையதளத்தில் லீக்: படக்குழு அதிர்ச்சி

லாஸ்ஏஞ்சல்ஸ்: பேட்மேன் படத்தின் ஆக்‌ஷன் காட்சியொன்று இணையதளத்தில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. பேட்மேன் படத்தின் புதிய பாகம் வரும் மார்ச் 4ம் தேதி தியேட்டர்களில் திரைக்கு வருகிறது. இதில் ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடித்திருக்கிறார். மேட் ரிவ்ஸ் இயக்கியுள்ளார். படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான ஆக்‌ஷன் காட்சியை யாரோ திருடி, இணையதளத்தில் வெளியிட்டுவிட்டனர். அந்த காட்சியில் பேட்மேனாக நடித்துள்ள ராபர்ட் பேட்டின்சன், ஒருவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்டிருப்பார்.

அப்போது அந்த இடத்துக்கு கார் ஒன்று வருகிறது. வேகமாக வந்த கார் மோதி பலர் காயம் அடைகிறார்கள். அந்த காரிலிருந்து இறங்கும் முதியவர், மனித வெடிகுண்டாக இருக்கிறார். அதற்கான ரிமோட் வில்லனிடம் இருக்கிறது. அந்த முதியவரின் உடையில் டு தி பேட்மேன் என எழுதப்பட்டுள்ளது. இந்த காட்சி படத்தில் முக்கியமான திருப்புமுனையாக இருக்குமாம். இது லீக் ஆகிவிட்டதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து இந்த காட்சியின் தெளிவான பிரின்ட்டை இப்போது படக்குழுவே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இதை வைத்தே படத்தை விளம்பரப்படுத்துவோம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories: