12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 86வது லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் 34-25 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி 5வது வெற்றியை பெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் 31-26 என்ற புள்ளி கணக்கில் உபி யோத்தாவை வீழ்த்தியது.